×

கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை! ஆனால்…. – கமல்ஹாசன் காட்டம்

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ
 

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் அவரது ட்விட்டரில்,  “கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து,இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்” என பதிவிட்டுள்ளார்.