×

கொலை செய்யப்பட்டாரா சூலூர் அதிமுக எம்.எல்.ஏ.,?அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ!

சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கனகராஜ், கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி காலமானார் சூலூர்: அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.,-வாக இருந்தவர் கனகராஜ் (64). சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கனகராஜ், கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி
 

சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கனகராஜ், கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி காலமானார்

சூலூர்: அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.,-வாக இருந்தவர் கனகராஜ் (64). சுல்தான்பேட்டை ஊராட்சித் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்த கனகராஜ், கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி காலமானார். சூலூர் அருகே உள்ள காம நாயக்கன் பாளையம் வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது, மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கனகராஜ் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அதில் பேசும் நபர், அனுமதியில்லாத பாரில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுவில் விஷம் வைத்து சொந்த கட்சிக்காரர்களே அவரை கொன்று விட்டதாக கூறுகிறார்.

கனகராஜ் இறப்பதற்கு முன்னர், மோப்பிரிபாளையம் பகுதியில் உள்ள அவரது கட்சியின் நிர்வாகி ஒருவரது வீட்டில் மது அருந்ததியதாகவும், அப்போது உணவருந்த வந்த கட்சியின் பிரமுகர் ஒருவர், எம்.எல்.ஏ.,-வுக்கு அனுமதியில்லாத பாரில் இருந்து மதுவை வரவழைத்து கொடுத்ததாகவும் கூறும் அந்த நபர், அந்த அதிமுக நிர்வாகி வீட்டிலேயே கனகராஜ் இறந்து விட்டதாகவும், பின்னர் அவரது உடலை காரில் கொண்டு சென்று தோட்டத்து வீட்டில் படுக்க வைத்து விட்டனர் எனவும் கூறுகிறார்.

அத்துடன், மறுநாள் காலை அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக நாடகமாடி விட்டனர் எனவும் வீடியோவில் பேசும் அந்த நபர் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ விஷம் வைத்து கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் சூலூர் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.