×

கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருப்போரை குணப்படுத்தும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை!

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும். மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயந்தி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில்
 

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும். மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயந்தி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 95% நுரையீரல் பாதிப்பில் இருந்த ஆண் ஒருவர் குணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ஐயப்பன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதேபோல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 90 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பெண் ஒருவரும் குணமடைந்தார். ஜூன் மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முனியம்மாள் ஆஷா இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.