×

கொரோனா வைரஸ் தமிழகத்தில் 2வது கட்டத்தை நோக்கி நகர்கிறது- முதலமைச்சர் பழனிசாமி

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மன அழுத்தம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெற வேண்டும். அரசு அனுமத்தித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம். 200 ஆம்புலன்ஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. யாரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது. ஏற்கனவே தமிழக
 

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மன அழுத்தம் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெற வேண்டும். அரசு அனுமத்தித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம். 200 ஆம்புலன்ஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. யாரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது. ஏற்கனவே தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். எனவே பொது மக்கள் தேவைப்படும் போது மட்டும் வெளியே வந்து பொருட்களை வங்கி செல்லவும். வீட்டை விட்டு தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம்.கொரோனாவை தடுக்க ஒரே வழி அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான்.

ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசு மக்களுக்கு அத்தியாவசிய தேவை பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளது. அனைத்து இடங்களிலும் அரசு கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தமிழகத்தில் 2வது கட்டத்தை நோக்கி நகர்கிறது” என தெரிவித்தார்.