×

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தவிர, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வசித்து வந்த ராஜம் (68) என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தவிர, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வசித்து வந்த ராஜம் (68) என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல, புத்தேரியைச் சேர்ந்த பரமேஸ்வரி (53) என்பவரும்  கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர்கள் இரண்டு பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் இரண்டு பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். அவர்களது பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்தால் தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா..இல்லையா என்பது தெரிய வரும்.