×

கொரோனா பீதி..ஐ.டி கம்பெனியாக மாறிய பண்ணை வீடு: எழில் மிகுந்த இயற்கையோடு உற்சாகமாக வேலை செய்யும் ஊழியர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமெங்கும் பரவியுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமெங்கும் பரவியுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும், பல ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த கேப்ரியல் ஆப்பிள் என்னும் நிறுவனத்துடன் இணைந்து இன்ஸ்டாகிளீன் என்ற ‘ஆண்ட்ராய்டு’ ஐ.ஓ.எஸ் ஆப்பை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி
 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமெங்கும் பரவியுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமெங்கும் பரவியுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும், பல ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த கேப்ரியல் ஆப்பிள் என்னும்  நிறுவனத்துடன் இணைந்து இன்ஸ்டாகிளீன் என்ற ‘ஆண்ட்ராய்டு’ ஐ.ஓ.எஸ் ஆப்பை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் அரவிந்த் என்பவர், தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டையே நிறுவனமாக மாற்றியுள்ளார். பெங்களூரில் 20 பேரை வைத்து இந்த கம்பெனியை  நடத்தி வந்த இவர், கொரோனா பீதியால் எழில் மிகுந்த தனது கிராமத்துக்கே மாற்ற முடிவு செய்து அதனைச் செயல் படுத்தியுள்ளார். 

இது குறித்துப் பேசிய அரவிந்த், “ஸ்டார்ட் அப் நிறுவனத்தைக் கிராமத்தில் தொடங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதற்கு ஏதுவாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனை எங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டோம். 12 பேர் கொண்ட இந்த குழுவில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

எழில் மிகுந்த இயற்கையோடு உற்சாகமாக வேலை செய்து வருகிறோம். காலை 7 முதல் 3 மணி வரை வேலை செய்வோம். அதன் பிறகு, நீச்சல், வயல் வெளி என்று ஆனந்தமாக இருப்போம். எங்களைப் பார்த்துப் பல நிறுவனங்கள் இதே போல எங்களுக்கும் அமைத்துத் தர முடியுமா என்று கேட்கின்றனர். கொரோனவால் கிராமங்கள் எல்லாம் ஐடி பார்க் ஆக மாறி வருகிறது” என்று கூறினார்.