×

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 வழங்கிய இரு வழக்கறிஞர்கள்!

கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்புக்கு மக்களும், நிறுவனங்களும் நிதியுதவி வழங்கலாம் என கோரிக்கையும் வைத்துள்ளது. இதையடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகை, நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர். இதுவரை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 130 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாக தமிழக
 

கொரோனாதொற்று காரணமாக கடந்த 24 ஆம்  தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்புக்கு மக்களும், நிறுவனங்களும்  நிதியுதவி  வழங்கலாம் என  கோரிக்கையும்  வைத்துள்ளது. இதையடுத்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகை, நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர். இதுவரை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 130 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலா ஒரு ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். மற்றொரு வழக்கறிஞர் 10 ரூபாய் வழங்கியுள்ளார். அவர்களின் உதவும் மனப்பான்மையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் இச்செயல் நிவாரணம் நிதி திரட்டுவதை கேலி செய்யும் வகையில் உள்ளதாக பார் கவுன்சில் உறுப்பினர் பால் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.