×

கொரோனா தொற்று பரப்பியதாக பாதிக்கப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு சில மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சிவப்பு, ஆரஞ்ச், சிவப்பு என மூன்று வகையாக பிரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு சில மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதாவது கொரோனா பாதிப்பு இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டது.
 

கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு சில மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சிவப்பு, ஆரஞ்ச், சிவப்பு  என மூன்று வகையாக பிரித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு சில மாவட்டங்கள் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதாவது கொரோனா பாதிப்பு இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் கிருஷ்ணகிரியும் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 65 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி இப்போது ஆரஞ்ச் மண்டலமாக மாறியுள்ளது. அந்த முதியவருக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் வந்தது என்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் ஆந்திராவில் பணியாற்றிவிட்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று ஏற்படுத்தியதாக அந்த முதியவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.