×

கொட்டி தீர்த்த கனமழை: இடிந்து விழுந்த மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம்!

கங்கை கொண்டான் மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. மாமல்லபுரத்தில் பெய்த கனமழை காரணமாக ஸ்தல சயன பெருமாள் கோயிலின் கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பரவலாக மழை பேசியது வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல நூற்றாண்டுகளைக் கடந்த காஞ்சிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலுக்கு
 

கங்கை கொண்டான் மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது.

மாமல்லபுரத்தில் பெய்த கனமழை காரணமாக ஸ்தல சயன பெருமாள் கோயிலின் கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒருபகுதி  இடிந்து விழுந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பரவலாக மழை பேசியது வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், பல நூற்றாண்டுகளைக் கடந்த காஞ்சிபுரம்  ஸ்தல சயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் சிதிலமடைந்து இருந்த நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது.  அதில் உள்ள தூண்கள் உள்வாங்கி உள்ள நிலையில் மொத்த மண்டபமும் எப்போது வேண்டுமானாலும்  இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மண்டபத்தை ஆய்வு செய்தனர். மேலும், மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.