×

கெட்ட வார்த்தையில் பேசிய பெண் காவலர் ! குடிபோதையில் ரகளை..!

திண்டுக்கல் மாவட்டம் உள்ளூர் பேருந்து நிலையம் சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்தவர்களை அவரை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததும், அதனால் நிதானத்தில் இல்லை என்பதும் அவர் மீது வீசிய வாடையில்தான் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதுபோதையில் இருந்த பெண் காவலர் ஒருவர் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசியதால் இன்று செய்திகளில் இடம்பிடித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் உள்ளூர் பேருந்து நிலையம் சீருடையில் இருந்த பெண்
 

திண்டுக்கல் மாவட்டம் உள்ளூர் பேருந்து நிலையம் சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்தவர்களை அவரை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததும், அதனால் நிதானத்தில் இல்லை என்பதும் அவர் மீது வீசிய வாடையில்தான் தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதுபோதையில் இருந்த பெண் காவலர் ஒருவர் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசியதால் இன்று செய்திகளில் இடம்பிடித்துவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் உள்ளூர் பேருந்து நிலையம் சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்தவர்கள் ,அவரை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததும், அதனால் நிதானத்தில் இல்லை என்பதும் அவர் மீது வீசிய வாடையில்தான் தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலரின் செல்போனை எடுத்து அவரது வீட்டிற்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவலரின் மகன் அவரை ஆட்டோவில் அமரவைத்தார். அப்போது நிதானத்தில் இல்லாத அந்த பெண் காவலர் அரை போதையில் அங்கிருந்தவர்களை அவதூறாக பேசினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறை பெண் காவலர் எங்கே என கேட்க வீட்டிற்கு சென்றுவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதேபோல் ஒரு சம்பவம் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலும் திண்டுக்கல் பகுதியில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தனது காதலனோடு காரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி வெளியானது ஞாபகம் இருக்கிறதா..! திண்டுக்கல் என்றால் பூட்டு,பிரியாணி இரண்டும்தான் ஞாபகம் வரும்…இனி இது போல் சம்பவங்கள்தான் அதிகம் ஞாபகத்துக்கு வரும் போல!?