×

குரூப் 2 தேர்வு முறைகேடு.. இடைத்தரகர் ஜெயகுமாருக்கு 7 நாட்கள் காவல்!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு நாள் புழல் சிறையில் வைத்து, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டார். அதன் படி இன்று ஜெயகுமார்
 

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு நாள் புழல் சிறையில் வைத்து, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டார். 

அதன் படி இன்று ஜெயகுமார் மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஜெயகுமாரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அப்போது, ஜெயக்குமார் தான் இந்த வழக்கில் தவறு செய்யவில்லை என்பதால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறி அழுதுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.