×

குடும்பத்தில் அடுத்தடுத்த மரணங்கள்…நியூ இயர் இரவு இளைஞருக்கு நடந்த சோகம்!

வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்றார். கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் கௌதம சந்திரசேகரன். ரயில்வே ஊழியராக இருந்த இவருக்கு, செல்வி ரேணுகாதேவி என்ற மனைவியும், விக்னேஸ்வரன், செந்தில் என்ற மகன்களும் உள்ளனர். கௌதம சந்திரசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, அவர் இறந்த அடுத்த இரண்டு மாதத்தில் மாணவி செல்வி ரேணுகாதேவியும் இறந்துள்ளார். இதனால் திருமணமான அண்ணன் விக்னேஸ்வரனுடன் செந்தில் ரயில்வே
 

வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்றார்.

கிழக்கு தாம்பரம் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் கௌதம சந்திரசேகரன். ரயில்வே ஊழியராக இருந்த இவருக்கு,  செல்வி ரேணுகாதேவி என்ற மனைவியும்,  விக்னேஸ்வரன்,  செந்தில் என்ற மகன்களும் உள்ளனர். கௌதம சந்திரசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, அவர் இறந்த அடுத்த இரண்டு மாதத்தில் மாணவி செல்வி ரேணுகாதேவியும் இறந்துள்ளார். இதனால் திருமணமான அண்ணன்  விக்னேஸ்வரனுடன் செந்தில்  ரயில்வே குடியிருப்பில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் புத்தாண்டன்று, கடந்த புதன்கிழமை அதிகாலை 1:30 மணி அளவில், பணி முடிந்து, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே வீட்டிற்கு செந்தில் நடந்து சென்றார். அப்போது மழைநீர் தேங்கி இருந்ததால் அதை தாண்ட முயன்ற அவர்  பேலன்ஸுக்காக அங்கிருந்த  மின் கம்பத்தை பிடித்துள்ளார்.  மின்கசிவால் மின்சாரம் தாக்கி செந்தில் பரிதாபமாகப் பலியானார். 

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் செந்தில் உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மரணங்கள்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.