×

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு : சென்னையில் தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
 

டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்குப் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல மதுரை மற்றும் கோவையிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஏற்கனவே டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் இன்று முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை என்று அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.