×

குடியரசு தலைவரிடம் இருந்து பதில் வர தாமதம்..! அரசு இல்லத்தைக் காலி செய்த தலைமை நீதிபதி தகில்ரமாணி…

உச்சச நீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணியை மேகாலய உயர்நீதி மன்றத்துக்கு இடம் மாற்ற முடிவு செய்தது. அதனை மறுபரிசீலனை செய்யுமாறு தகில்ரமாணி அளித்த மனுவை கொலீஜியம் மறுத்தது. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். மேலும், குடியரசு தலைவரிடம் இருந்து பதில் வரும் வரை எந்த வழக்கிலும் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்த நிலையில், அவரது தலைமையில் வழக்குகள் ஏதும் விசாரிக்கப் பட வில்லை. இந்நிலையில்,
 

உச்சச நீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணியை மேகாலய உயர்நீதி மன்றத்துக்கு இடம் மாற்ற முடிவு செய்தது. அதனை மறுபரிசீலனை செய்யுமாறு தகில்ரமாணி அளித்த மனுவை கொலீஜியம் மறுத்தது. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். மேலும், குடியரசு தலைவரிடம் இருந்து பதில் வரும் வரை எந்த வழக்கிலும் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்த நிலையில், அவரது தலைமையில் வழக்குகள் ஏதும் விசாரிக்கப் பட வில்லை. 

இந்நிலையில், அவர் குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வமான பதிலுக்காக காத்திருப்பதாகவும், எந்த நிலையிலும் தான் மேகாலயா நீதி மன்றத்துக்கு இடமாற்றம் செய்யப் படலாம் என்றும் கருதி, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து  தனது உடைமைகளை மாற்றி வருவதாக தகவல் வெளியாகின்றன.