×

குடி படுத்தும் பாடு; நடனமாடி ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு

சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், எவ்வளவு முயற்சித்தும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது! பெண்கள் மத்தியிலும் குடிப்பது சகஜமாகி விட்டது. உடல் அசதியை போக்க கூலித் தொழில் செய்யும் பெண்களும், துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள துப்புறவு தொழில் செய்யும் பெண்களும் குடிப்பதை பலரும் பார்த்திருக்கக் கூடும்! அதேபோல் பப், நட்சத்திர ஹோட்டல்களில் சில பெண்கள் குடிக்கின்றனர். இப்படி குடிப்பவர்கள் ஒரு அளவுக்கு மேல் அதற்கு அடிமையாவதில்தான் சிக்கல்
 

சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், எவ்வளவு முயற்சித்தும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் தவித்தனர்.

நாளுக்கு நாள் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது! பெண்கள் மத்தியிலும் குடிப்பது சகஜமாகி விட்டது. உடல் அசதியை போக்க கூலித் தொழில் செய்யும் பெண்களும், துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள துப்புறவு தொழில் செய்யும் பெண்களும் குடிப்பதை பலரும் பார்த்திருக்கக் கூடும்! அதேபோல் பப், நட்சத்திர ஹோட்டல்களில் சில பெண்கள் குடிக்கின்றனர். இப்படி குடிப்பவர்கள் ஒரு அளவுக்கு மேல் அதற்கு அடிமையாவதில்தான் சிக்கல் எழுகிறது. அப்படி குடித்துவிட்டு ஒரு பெண் ரகளை செய்ததால், நாகர்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலின் பரபரப்பான கோட்டார் சந்திப்பில் ஒரு பெண் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டார். சாலையின் நடுவே நடனமாடி பொதுமக்களுக்கு இடையூரை ஏற்படுத்தினார். இதனை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், எவ்வளவு முயற்சித்தும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் தவித்தனர்.

பின்னர் காவல்துறை வந்தும் அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியவில்லை. 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு டயர்டாகி அவரே அந்த இடத்தை விட்டு சென்றிருக்கிறார். டாஸ்மாக்குக்கு எதிராக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்திருக்கிறது. ஆனால் டாஸ்மாக் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் உள்ளது!