×

கிட்னி தானத்திற்கு  3 கோடி… பிரபல மருத்துவமனை பெயரில் மோசடி

அங்கொன்றும் இங்கொன்றுமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று ஈடுபட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கும்பல்கள் தற்போது மருத்துவமனை பெயர்களில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளன அங்கொன்றும் இங்கொன்றுமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று ஈடுபட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கும்பல்கள் தற்போது மருத்துவமனை பெயர்களில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளன. ஈரோடு சம்பத் நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபலமான கிட்னி கேர் மருத்துவமனை உள்ளது. மக்களின் பணத்தாசையைப் பயன்படுத்தி மோசடி செய்து வரும் வடமாநில
 

அங்கொன்றும் இங்கொன்றுமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று ஈடுபட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கும்பல்கள் தற்போது மருத்துவமனை பெயர்களில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளன

அங்கொன்றும் இங்கொன்றுமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு என்று ஈடுபட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வடமாநில கும்பல்கள் தற்போது மருத்துவமனை பெயர்களில் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளன. ஈரோடு சம்பத் நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபலமான கிட்னி கேர் மருத்துவமனை உள்ளது. மக்களின் பணத்தாசையைப் பயன்படுத்தி மோசடி செய்து வரும் வடமாநில கும்பல் ஒன்று, இந்த மருத்துவமனையின் இணையதள முகவரியில் சிறிய மாற்றம் செய்து போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார்கள்.

அவ்வாறு போலியாக அவர்கள் உருவாக்கிய இணையதளத்தில், நோயாளிகளுக்கு கிட்னி தேவைப்படுவதாகும், அவ்வாறு கிட்னி தானம் செய்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அப்படி கிட்னி தானம் செய்தால் 3 கோடி வரையில் பணம் வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்துள்ளனர்.
பணத்தாசையில் மயங்கி இந்த மோசடி விளம்பரத்தில் விழும் பொதுமக்களிடம், ரூபாய் 7,500 செலுத்தி, அதே இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன் படி அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் பணம் செலுத்தி முன்பதிவு செய்த பலர், மருத்துவமனைக்கு நேரிடையாக வந்து விவரம் கேட்டுச் சென்றுள்ளனர்.

 பிரச்சினையின் தீவிரம் அறிந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபாகரன், ஆதாரங்களை திரட்டி இந்திய மருத்துவர்கள் சங்கம், காவல் நிலையம், தேசிய மருத்துவமனை ஆணையத்திலும், புகார் அளித்துள்ளார்.  போலீஸாரின் தீவிர விசாரணையில், போலியான இணைய தள முகவரியை உருவாக்கியது வடமாநில கும்பல் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த கும்பலை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.