×

காவிரி கூக்குரல் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: ஈஷா!

கடந்த ஆண்டு கோடி ரூபாய் காரிலும்,ஹார்ட்லி டேவிட்சன் பைக்கிலும் பயணம் செய்தபடி ஒரு திட்டத்தை அறிவித்தார் ஜக்கி வாசுதேவ்.அதன்படி காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகில் துவங்கி திருவாரூர் வரை 639 கிலோமீட்டர் தூரத்திற்கு 253 கோடி மரங்கள் நடப்போவதாகச் சொன்னார். ஒரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்க 42 ரூபாய் நன்கொடை வசூலிக்கப் போவதாக அறிவித்தார்.இதற்கு,உள்ளூர் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஜக்கியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.இந்த நேரத்தில்தான் ஏ.வி அமரநாதன் இதுபற்றி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப்
 

கடந்த ஆண்டு கோடி ரூபாய் காரிலும்,ஹார்ட்லி  டேவிட்சன் பைக்கிலும் பயணம் செய்தபடி ஒரு திட்டத்தை அறிவித்தார் ஜக்கி வாசுதேவ்.அதன்படி காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகில் துவங்கி திருவாரூர் வரை 639 கிலோமீட்டர் தூரத்திற்கு 253 கோடி மரங்கள் நடப்போவதாகச் சொன்னார்.

ஒரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்க 42 ரூபாய் நன்கொடை வசூலிக்கப் போவதாக அறிவித்தார்.இதற்கு,உள்ளூர் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஜக்கியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.இந்த நேரத்தில்தான் ஏ.வி அமரநாதன் இதுபற்றி கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்.ஒரு மரகன்றுக்கு 42 ரூபாய் என்றால் 253 கோடி மரம் நட 10,626 கோடி வசூலுக்கு கணக்கு எங்கே,அந்த மரங்களை நட நிலம் எங்கே என்று கேட்டிருந்தார். 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் ஓஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,அவர் கர்நாடக அரசு,ஈஷா பவுண்டேசன்  ஆயோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் அந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது.அதில் அரசு நிலத்தில் மரங்கள் நடவோ,பணம் வசூலிக்கவோ ஈஷாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கர்நாடக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஈஷா பவுண்டேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதம்தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் பேசும் போது ‘ ஈஷாவுக்கும் காவிரி கூக்குரல் நிகழ்ச்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.காவிரிக் கூக்குரல் திட்டத்தை செயல்படுத்துவது ஈஷா ஒவுட்ரீச் என்கிற சாரிட்டபுள் ட்ரஸ்ட். ஈஷா ஃபவுண்டேஷன் தியானம் மற்றும் யோகா கற்பிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது’ என்று தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி ஓகா ‘ஆன்மீக நிறுவனங்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதக் கூடாது’ என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார்.