×

காவல்துறையில் 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஒய்வு வழங்க உத்தரவு!

காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் முடுக்கி விட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் 4 மற்றும் 5 ஆம் வாரங்களில் தற்போது இந்தியா இருப்பதால், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய
 

காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் முடுக்கி விட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் 4 மற்றும் 5 ஆம் வாரங்களில் தற்போது இந்தியா இருப்பதால், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மக்கள் எல்லாரும் வீட்டில் இருக்கும் நிலையில் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது. முதியவர்களுக்கு அதிகமாக கொரோனா பரவுவதால் காவல்துறையில் 50 வயதுக்கு மேலான காவலர்களுக்கு ஒய்வு வழங்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், நீரிழிவு நோய் உட்பட எந்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கண்காணிப்பில் உள்ள காவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றும்  இணை ஆணையர் சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.