×

காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்த தடை: தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

காவலர்கள் இனி செல்ஃபோன் உபயோகிக்க கூடாது என தமிழக காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: காவலர்கள் இனி செல்ஃபோன் உபயோகிக்க கூடாது என தமிழக காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் காவல்துறை சார்ந்த ரகசியங்கள், வீடியோ வடிவில் கசிவதாக காவல்துறை தலைமைக்கு, தொடர்ந்து தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக கீழ் நிலை காவலர்கள் மூலமாகவே, இந்த தகவல்கள் கசிவதாக உளவுத்துறை மூலம் காவல்துறை தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், உதவி ஆய்வாளருக்கு கீழ் இருக்கும் காவலர்கள்
 

காவலர்கள் இனி செல்ஃபோன் உபயோகிக்க கூடாது என தமிழக காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: காவலர்கள் இனி செல்ஃபோன் உபயோகிக்க கூடாது என தமிழக காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் காவல்துறை சார்ந்த ரகசியங்கள், வீடியோ வடிவில் கசிவதாக காவல்துறை தலைமைக்கு, தொடர்ந்து தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக கீழ் நிலை காவலர்கள் மூலமாகவே, இந்த தகவல்கள் கசிவதாக உளவுத்துறை மூலம் காவல்துறை தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், உதவி ஆய்வாளருக்கு கீழ் இருக்கும் காவலர்கள் செல்ஃபோன் உபயோகிக்க தடை விதிப்பதாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, தமிழக டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என்றும் டிஜிபி அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.