×

கார்த்தி சிதம்பரத்தின் ரூ 22.28 கோடி சொத்துகள் முடக்கம்!

தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ 22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்க; வெளியாகியுள்ளன. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக
 

தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ 22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்க; வெளியாகியுள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காகவும் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற அனுமதியோடு வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 28-ம் தேதி நாடு திரும்பிய பொது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ 22.28 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக அரசின் அத்துமீறல்களை தொடர்ந்து எனது தந்தை ப.சிதம்பரம் வெளிக் கொண்டுவருவதால், எங்கள் மீது பாஜக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் உத்தரவு!