×

காசாளர் பழனிசாமியின் மரணம் கொலைதான்! பிரேத பரிசோதனையில் தகவல்… 

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் கொலை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் கொலை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர்.
 

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் கொலை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணம் கொலை தான் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது மார்ட்டின் குழுமத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பழனிசாமியிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  பழனியிடம் விசாரணைகள் முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில்  காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி காசாளர் பழனிசாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், பழனிசாமியிடம் விசாரணை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தனது தந்தையின் உடலை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென அவரின் மகன் ரோகின்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் காசாளர் பழனிசாமியின் மரணம் கொலை தான் என தெரியவந்துள்ளது.