×

கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு…இந்து எழுச்சி முன்னணியினரின் அட்ராசிட்டி!

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு பகவானே என்று கூறியது குறிப்பிடத்தக்கது. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்துவைத்த சம்பவம் தேனியில் அரங்கேறியது. உலகமெங்கும் பிப்ரவரி 14 ஆம் தேதியான நேற்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டது. இதனால் பொது இடங்களான பூங்காக்கள், கடற்கரைகளில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. காதலர்கள் பரிசுப்பொருட்கள், ரோஜாக்கள் என பல பரிசுப்பொருட்களைத் தந்து தங்கள் துணையை அசத்தினர். இந்நிலையில் தேனி பொம்மையகவுன்டன் பட்டியில் உள்ள சிவன்
 

காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு பகவானே என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்துவைத்த சம்பவம் தேனியில் அரங்கேறியது. 

உலகமெங்கும் பிப்ரவரி 14 ஆம் தேதியான நேற்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டது. இதனால் பொது இடங்களான பூங்காக்கள், கடற்கரைகளில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது.  காதலர்கள் பரிசுப்பொருட்கள், ரோஜாக்கள் என பல பரிசுப்பொருட்களைத் தந்து தங்கள் துணையை அசத்தினர்.

இந்நிலையில் தேனி பொம்மையகவுன்டன் பட்டியில் உள்ள சிவன் ஆலயம் முன்  இந்து எழுச்சி முன்னணியினர் கூடி கூடிய கழுதை மற்றும் நாய்க்கு தாலி  கட்டி திருமணம் செய்து வைத்தனர்.  

சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்து நடந்த இந்த திருமணத்தின் போது,  கழுதை பகவானே! கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு பகவானே என்று கூறியது குறிப்பிடத்தக்கது.