×

கறுப்புக்கொடி போராட்டம்: வைகோ உள்ளிட்ட 403 பேர் மீது வழக்குப்பதிவு!

பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணகுடி: பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்திருந்தார். மோடியின் தமிழக வருகையின் போது, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தும் வைகோ நேற்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக நெல்லை – தூத்துக்குடி
 

பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணகுடி: பிரதமர் மோடிக்கு கருப்புக் காட்டியது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 403 பேர்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று கன்னியாகுமரி வந்திருந்தார். மோடியின் தமிழக வருகையின் போது, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தும் வைகோ நேற்றும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக  நெல்லை – தூத்துக்குடி சந்திப்பான காவல் கிணற்றில் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ‘Gobackmodi’ என கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்டனர்.

இதையடுத்து பா.ஜ.க.வினர் சிலர் கூட்டத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம்  ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.  கல்வீச்சில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,  வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டம் தொடர்பாக 50 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 403 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக கருப்பு கொடி போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.