×

கர்ப்பிணி வயிற்றில் துணி வைத்து தைத்த அவலம்: தொடரும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்!?

கர்ப்பிணி வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும், முகமூடி துணி வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர்: கர்ப்பிணி வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும், முகமூடி துணி வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மனைவி கவிதா. இவர்களுக்குக் கடந்த ஜனவரி மாதம் ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த கவிதா தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரது உடல்
 

கர்ப்பிணி வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும், முகமூடி துணி வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூர்: கர்ப்பிணி வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும், முகமூடி துணி வைத்துத் தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர்  ராகவேந்திரா. இவரது மனைவி கவிதா. இவர்களுக்குக் கடந்த ஜனவரி மாதம் ஓசூர் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த கவிதா தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரது உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. 

இதையடுத்து ஒருநாள் கவிதா  இயற்கை உபாதையைக் கழிக்கும் போது, துணி ஒன்று வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அறுவைசிகிச்சை செய்யும் போது, Nose Mask எனப்படும் துணியை வைத்து மருத்துவர்கள் தைத்திருப்பது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து  கவிதாவின் உறவினர்கள், அலட்சியமாக வேலைசெய்த டாக்டர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஓசூர் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கவிதாவை ஸ்கேன் செய்து, பிறகு மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு  அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.