×

கருப்புப் பணம் பதுக்கியதாக சிக்கிய சென்னை அறக்கட்டளைகள்! – பரபரப்பு தகவல் வெளியானது

வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கிய நிறுவனங்கள் பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து வருட ஆட்சி முடிந்து, மீண்டும் அவர்களே இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளனர். வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கிய நிறுவனங்கள் பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த
 

வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கிய நிறுவனங்கள் பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து வருட ஆட்சி முடிந்து, மீண்டும் அவர்களே இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளனர்.

வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கிய நிறுவனங்கள் பட்டியல் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இதில், சென்னையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து வருட ஆட்சி முடிந்து, மீண்டும் அவர்களே இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனாலும், ஒரு ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டதாக கூட செய்திகள் வரவில்லை. ஆனாலும் கருப்பு பணத்தை ஒழிக்க என்று பொது மக்களுக்கு அளிக்கும் கசப்பு மருந்துகளை மக்கள் சிரித்த முகத்தில் ஏற்றுக்கொண்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டின.

கருப்பு பணத்தை மீட்க, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை அளிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் சுவிட்சர்லாந்துடன் ஓர் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இப்படி ஒரு பட்டியல் இந்தியாவிடம் வழங்கப்பட்டதாக பரப்பரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அது பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கி மட்டுமின்றி பனாமா, கேமன், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் கூட இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக பெரிய பெரிய நிறுவனங்கள் அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் கருப்பு பணத்தை பதுக்கி வைப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கேமன் தீவுகளில் சென்னையைச் சேர்ந்த பி.தேவி அறக்கட்டளை, பி.தேவி குழந்தைகள் அறக்கட்டளை, தினோத் அறக்கட்டளை, அகர்வால் குடும்ப அறக்கட்டளை, தேவி லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் என பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி கருப்பு பணத்தை பதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொழிலதிபர்கள் அதுல் புஞ்ச், கௌதம் கெகய்தான், சதீஷ் கல்ரா, வினோத் குமார் கன்னா, துல்லாபாய் கன்வெர்ஜி வகேலா என பல தொழிலதிபர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைத் தொடங்கியவர்கள் தற்போது மறைந்துவிட்டனர். ஆனால், அவர்களின் வாரிசுகள் இந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இதனால், இவர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். 

இந்தியாவில் வாி ஏய்ப்பில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், பெரிய பெரிய தொழிலதிபர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.