×

கமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி

கமல் பேசுவது புரியாது. அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டும் என கமலுக்கு முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை: கமல் பேசுவது புரியாது. அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டும் என கமலுக்கு முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு சின்னப்பையன் அதை செய்த பின்
 

கமல் பேசுவது புரியாது. அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டும் என  கமலுக்கு முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: கமல் பேசுவது புரியாது. அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டும் என  கமலுக்கு முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ஒரு சின்னப்பையன் அதை செய்த பின் நீங்கள் செய்கிறீர்களே…வெட்கமாக இல்லையா? உங்களுக்கு என ஸ்டாலினை விமர்சித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்ட மன்றத்தில் சட்டையை கிழித்து கொள்ள மாட்டேன். சட்டை கிழிந்தாலும் புது சட்டையுடன் தான் வெளியில் வருவேன் நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம் என்றார்.

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார். கமல் பேசுவது புரியாது. அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர் ஒருநாளும் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டார். கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல் ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார்.

கிராம சபை கூட்டத்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தனது அமைச்சர்களை கொண்டு நடத்தியுள்ளார். கமல் ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை, அந்த காலகட்டத்தில் அவர் கதாநாயகியுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்திருப்பார். திமுக வரலாற்றை கமல் ஹாசன் படித்தறிய வேண்டும். அரசியல் கட்சி தொடங்கி எதனை நோக்கிச் செல்கிறோம் என்று தெளிவற்றுத் திரியும் கமல் ஹாசன் மற்றவர்களை பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக்கூத்தானது’ என்று முரசொலி விமர்சித்துள்ளது.