×

கபசுர கஷாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே அருந்த வேண்டும்! – தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் பேட்டி

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கபசுர குடிநீர் என்ற சித்த மருந்தை தேடி ஓடி வருகின்றனர். இதை எல்லோரும் பயன்படுத்தக் கூடாது என்று சித்த மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை விடுத்தள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கபசுர குடிநீர் என்ற சித்த மருந்தை தேடி ஓடி வருகின்றனர். இதை எல்லோரும் பயன்படுத்தக் கூடாது என்று சித்த மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை விடுத்தள்ளார். டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக இருந்தபோது
 

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கபசுர குடிநீர் என்ற சித்த மருந்தை தேடி ஓடி வருகின்றனர். இதை எல்லோரும் பயன்படுத்தக் கூடாது என்று சித்த மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கபசுர குடிநீர் என்ற சித்த மருந்தை தேடி ஓடி வருகின்றனர். இதை எல்லோரும் பயன்படுத்தக் கூடாது என்று சித்த மருத்துவமனை இயக்குநர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக இருந்தபோது நிலவேம்பு குடிநீர் பற்றி சித்த மருத்துவர்கள் அறிவித்தனர். பப்பாளி இலை, நிலவேம்பு குடிநீர் என்று அவர்கள் கூறிய சித்த மருத்துவ முறைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து டெங்குவை விரட்ட உதவும் என்றும் கூறப்பட்டது. அதனால் மக்களுக்கு பலனும் கிடைத்தது. அதை அப்படியே ஆயுர்வேத மருந்தாக மாற்றி மார்க்கெட்டிங் செய்தது வடஇந்திய குரூப்.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பலரும் நாட்டு மருந்து கடைகளில் குவிந்து கபசுர கஷாயத்தை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கபசுர குடிநீரை மிகப்பெரிய அளவில் தயாரித்து பொது மக்களுக்கும் அளித்து வருகிறது. அரசு சித்த மருத்துவமனைகளிலும் கூட கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த நிறுவனத்தின் மருத்துவமனை இயக்குநரிடம் கேட்டபோது, “கபசுர கஷாயம் என்பது மருந்து. இதை மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்” என்றார்.