×

கனிமொழியுடன் அதிமுக நிர்வாகி ரகசிய தொடர்பு..? ஆதாரத்தை காட்டிய கூகுள்..!

அதிமுக நிர்வாகி கனிமொழியுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியின் ரகசிய தகவல்களை கனிமொழிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதிமுக ஐடி பிரிவை நிர்வகித்து வரும் சிங்கை ராமச்சந்திரனை திமுக உளவாளி என முத்திரை குத்தி இருக்கிறார்கள் அதிமுகவை சேர்ந்த சிலர். கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான கோவிந்தராஜனின் மகன் ராமச்சந்திரன். அதிமுக ஐடி விங்கை நிர்வகித்து வந்த இவர் ஓ.பிஎஸ் பிரிந்து சென்ற பிறகு அவ்ருடன் சென்றார். பின்னர் இரு அணிகளும் இணைந்த பிறகு அதிமுக
 

அதிமுக நிர்வாகி  கனிமொழியுடன்  தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியின் ரகசிய தகவல்களை கனிமொழிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அதிமுக ஐடி பிரிவை நிர்வகித்து வரும் சிங்கை ராமச்சந்திரனை திமுக உளவாளி என முத்திரை குத்தி இருக்கிறார்கள் அதிமுகவை சேர்ந்த சிலர்.  

 கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான கோவிந்தராஜனின் மகன் ராமச்சந்திரன்.  அதிமுக ஐடி விங்கை நிர்வகித்து வந்த இவர் ஓ.பிஎஸ் பிரிந்து சென்ற பிறகு அவ்ருடன் சென்றார். பின்னர் இரு அணிகளும் இணைந்த பிறகு அதிமுக ஐடி விங்கை நடத்தி வருகிறார். இவர் கனிமொழியுடன்  தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியின் ரகசிய தகவல்களை கனிமொழிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புலணாய்வு வார இதழ் ஒன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’’கனிமொழியை, ராமச்சந்திரன் நேரில் சந்தித்துப் பேசியதாகக் கடந்த ஆண்டு நவம்பரில் புகைப்படம் ஒன்று வெளியானது.  உடனே அவரை அணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமானார். ஆனால், தனது அரசியல் எதிரிகள் ‘போட்டோஷாப்’ செய்துவிட்டதாக ராமச்சந்திரன் கூறியதையடுத்து, நடவடிக்கையிலிருந்து தப்பினார். தற்போது மீண்டும் அதே போன்றதொரு விவகாரம் கிளம்பி அடங்கி இருக்கிறது. 

கடந்த மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மே 27-ம் தேதி கனிமொழிக்கு ராமச்சந்திரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அதில், ‘அக்கா, தேர்தல் பிரசாரத்துக்காகக் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அவர்கள் செலவு செய்துள்ளனர். அவர்கள் அணுகிய சில விளம்பர நிறுவனங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் அமைச்சர் தங்கமணியின் மருமகனுக்குச் சொந்தமானவை. மீதியுள்ள நிறுவனங்கள் ஓ.பி.எஸ் குடும்பத்துக்குச் சொந்தமான பினாமி நிறுவனங்கள். அ.தி.மு.க 27 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும் வெற்றியடையப் போவதாக ‘ஐவா மீடியா’ என்கிற நிறுவனம் போலியான கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கெனவே உங்களிடம் தெரிவித்து விட்டேன். தேர்தலுக்காக விளம்பரம் செய்வதாகக் கூறி, கட்சிப் பணத்தை எடுத்து தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளனர். இப்படிச் செய்தால், எப்படி வெற்றியடைய முடியும்? இதுகுறித்த ஆவணங்களை எல்லாம் உங்களுக்கு அனுப்பி உள்ளேன். படித்தவுடன் டெலிட் செய்துவிடவும்’ என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட குறிப்புகளுடன் மின்னஞ்சலில் இணைத்து அவர் அனுப்பியுள்ள ஆறு ஆவணங்களும் அதிர்ச்சி ரகம். சென்னையைச் சேர்ந்த ஏ-1 பாசிட்டிவ் அட்வர்டைசிங் சொல்யூசன்ஸ், பிரவ்ஸ்கி மீடியா பிரைவேட் லிமிடெட், ஃப்ளேம் அட்வர்டைசிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட், எக்ஸெலன்ட்  பப்ளிசிட்டீஸ், பெங்களூரைச் சேர்ந்த ஐவா மீடியா இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் அ.தி.மு.க செய்த பணப் பரிமாற்றங்களையும் கனிமொழியின் ஜிமெயிலுக்கு ராமச்சந்திரன் அனுப்பியுள்ளார்.

இதில், ஐவா மீடியா நிறுவனத்துடன் 2019, மார்ச் 12-ம் தேதி அ.தி.மு.க போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி, முதல் தவணையாக ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது. பின்னர் 67,00,100 ரூபாய் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இந்த நிறுவனம்தான் அ.தி.மு.க 27 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக கருத்துக் கணிப்பை வெளியிட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பாக, ஒரு முன்னணி தொலைக்காட்சியில் இந்த முடிவுகள் வெளியாகின. அதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இருப்பதாக தி.மு.க முகாமுக்கு சிங்கை ராமச்சந்திரன் தகவலை அனுப்பியுள்ளார். மேற்கண்ட ஐந்து விளம்பர நிறுவனங்களுக்கும் கட்டணமாக 18.88 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளை விளம்பரப்படுத்த விளம்பர நிறுவனங்களை அணுகுவது வழக்கம். அவ்வகையில், அ.தி.மு.க அணுகிய நிறுவனங்களின் பட்டியல், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டணம் ஆகியவற்றை தி.மு.க-வுக்கு ராமச்சந்திரன் ‘பாஸ்’ செய்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

ராமச்சந்திரன் மீது ஏற்கெனவே அ.தி.மு.க தலைமைக்குச் சந்தேகம் இருந்தது. அதனால், அவர் உளவுத் துறையின் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்தார். இவரது மெயிலை ‘ஹேக்’ செய்துள்ள உளவுத்துறையினர், கனிமொழிக்கும் இவருக்கும் இடையே நடைபெற்ற (ஜி சாட்) உரையாடலைப் படம் எடுத்து முதல்வரிடம் ஆதாரபூர்வ மாக அளித்துள்ளனர். இந்த முறை ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட தால், மேல் நடவடிக்கையை கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும்” என்று விரிவாக விளக்கினர்.

குற்றச்சாட்டுக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார் சிங்கை ராமச் சந்திரன்? அவரிடமே பேசினோம். “இது முற்றிலும் பொய்யான செய்தி. ‘எம்கி மெயிலர்’ என்கிற மென்பொருள் மூலமாக, யார் வேண்டுமானாலும்… யாருக்கு வேண்டுமானாலும் மெயில் அனுப்பியதாக ஒரு பொய்யான ஆதாரத்தை உருவாக்கலாம். என் விவகாரத்திலும் அதுதான் நடந் துள்ளது. இறக்கும் வரை கட்சிக்காக உழைத்தவர் என் அப்பா கோவிந்த ராஜன். எனக்கு, என் சகோதரிக்குப் பெயர் வைத்தவர் ஜெயலலிதா. ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ படித்துவிட்டுச் சமூகசேவைக்காகத் தான் அரசியலில் இணைந்தேன்.

இதை யார் செய்திருந்தாலும் அவருக்கு:ஒருவரின் வீழ்ச்சியில் என்றுமே இன்னொருவர் வெற்றி காணமுடியாது,நல்லதை விதையுங்கள் நல்லது நடக்கும்-எண்ணம்போல் வாழ்க்கை. Google நிறுவனம் நான் Email அனுப்பவில்லை என்று கூறிய ஆதாரத்தையும் இணைத்துள்ளேன்,அம்மாவின் ஆசியுடன் தடைகளைத் தாண்டி என் பணி தொடரும் pic.twitter.com/1ZpwQzYCDE

— Singai GRamachandran (@RamaAIADMK) June 8, 2019

 

கடந்த முறை இதே போன்ற தொரு விவகாரம் எழுப்பப்பட்டது. அதுவும் பொய்தான். அதன் பிறகு என்னுடைய மெயில் பாதுகாப்பைப் பலப்படுத்தினேன். என்னுடைய மெயில்களை நான் நீக்கிவிட்டாலும், கடந்த மூன்று மாதங்களில் நான் யார் யாரிடம் மெயில் மூலமாகத் தொடர்பில் இருந்தேன் என்கிற பட்டியல் கூகுள் நிறுவனத்திடம் இருக்கும். இதன் மூலமாகக் கனிமொழியிடமோ, தி.மு.க-வைச் சேர்ந்த மற்ற எவரிடமோ நான் தொடர்பில் இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அரசியல் சூழ்ச்சி காரணமாக என்னைச் சிக்க வைக்க சிலர் முற்படுகிறார்கள். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை விரைவில் தலைமைக்குத் தெரியப்படுத்துவேன்” என தெரிவித்தாக அந்த கட்டுரை வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் இந்தக் கட்டுரை குறித்தும் அதில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கு ஆதாரமாக  கூகுள் அனுப்பிய மெயிலையும் பதிவிட்டு இருக்கிறார் சிங்கை ராமச்சந்திரன். அதில், ‘’இதை யார் செய்திருந்தாலும் அவருக்கு:ஒருவரின் வீழ்ச்சியில் என்றுமே இன்னொருவர் வெற்றி காணமுடியாது,நல்லதை விதையுங்கள் நல்லது நடக்கும்-எண்ணம்போல் வாழ்க்கை. கூகுள் நிறுவனம் நான் இ-மெயில் அனுப்பவில்லை என்று கூறிய ஆதாரத்தையும் இணைத்துள்ளேன். அம்மாவின் ஆசியுடன் தடைகளைத் தாண்டி என் பணி தொடரும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், இந்த செயலை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. அதிமுக ஐடி விங்கில் இருந்த சிங்கை ராமச்சந்திரன் ஓ.பி.எஸ் தனி அணியாக பிரிந்த போது அவருடன் சென்றார். அதன் பிறகு அதிமுக ஐடி விங்கை ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் நிர்வகித்து வந்தார். பிறகு அந்தப்பதவி மீண்டும் சிங்கை ராமச்சந்திரனுக்கே சென்றது. மதுரை தொகுதியில் மக்களவை தேர்தலில் தோற்று விட்டதால் மீண்டும் ராஜ் சத்யன் அதிமுக ஐடி விங் நிர்வாக பதவியை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு வருகிறார். இந்த நிலையில் சிங்கை ராமச்சந்திரனை பற்றி திமுக உளவாளி என்கிற வகையில் திரித்துக் கூறப்பட்டு வருகிறது.