×

கனமழையால் வீடு இடிந்து விழுந்து பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!

இதுவரை பலியான 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுவீடுகள் இடிந்து விழுந்தது. இங்கு இதுவரை பலியான 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மழை பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மூன்றாவது நாளாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக
 

இதுவரை  பலியான  17 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுவீடுகள் இடிந்து விழுந்தது.  இங்கு  இதுவரை  பலியான  17 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே மழை பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மூன்றாவது நாளாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  எந்தெந்த மாவட்டங்களில் மழையால்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசித்தார். 

இந்நிலையில்  நடூர் பகுதியில்  வீடுகள்  இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.