×

கனடாவில் விருது வாங்கவுள்ள பிரபல எழுத்தாளருடன் ஸ்டாலின் சந்திப்பு

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் இமையம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை: கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் இமையம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்துக்கு 2018ம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுமென, கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அறக்கட்டளை அறிவித்துள்ளார். சிறந்த எழுத்தாளர்களுக்கு
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் இமையம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை: கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் இமையம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இமையத்துக்கு 2018ம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுமென, கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அறக்கட்டளை அறிவித்துள்ளார். சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த பெருமைமிக்க ‘இயல்’ விருதுக்கு தமிழரான இமையம் தேர்வு செய்யப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதோடு இன்றி, திமுக எம்.பி. கனிமொழியும் எழுத்தாளர் இமையத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான இமையம், திராவிட இயக்கங்கள் மீதும் அதன் கொள்கைகள் மீதும் தீராத காதல் கொண்டவர். இவருக்கு இந்த விருது மிக பொருத்தமானது என்று கூறி மகிழ்கின்றனர் இவரின் வாசகர்கள்.

இந்நிலையில், விருது பெற தேர்வாகியதற்காக வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்து இமையம் நன்றி தெரிவித்தார்.