×

கணவனை அடித்து ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி! சிகிச்சை பலனின்றி இறந்த பரிதாபம்

திருப்பூர் மாவட்டத்தில், குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை அடித்த மனைவி, அவரை மருத்துவமனையில் சேர்த்ததும் ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவரது மனைவி உமாதேவி (47). இவர்களுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். திருப்பூர் மாவட்டத்தில், குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை அடித்த மனைவி, அவரை மருத்துவமனையில் சேர்த்ததும் ஆனால், சிகிச்சை பலனின்றி
 

திருப்பூர் மாவட்டத்தில், குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை அடித்த மனைவி, அவரை மருத்துவமனையில் சேர்த்ததும் ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவரது மனைவி உமாதேவி (47). இவர்களுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில், குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை அடித்த மனைவி, அவரை மருத்துவமனையில் சேர்த்ததும் ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49). இவரது மனைவி உமாதேவி (47). இவர்களுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். 
வெங்கடேசன் மது அருந்துவதும் அதனால் குடும்பத்தில் சண்டை நடப்பதும் வாடிக்கையாக இருந்தது. வீட்டிலிருந்த தட்டு முதல் கொண்டு கிடைப்பதை எல்லாம் விற்று மது அருந்துவது வெங்கடேசனின் வழக்கமாக இருந்தது. 

கடந்த 17ம் தேதி மொபட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி வெங்கடேசனை மருத்துவமனையில் சேர்த்தார் உமாதேவி. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறி, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். விபத்து மரணம் என்பதால் உடலை பிரேத பரிசோதனை செய்து உமாதேவியிடம் கொடுத்துள்ளனர். அவரும் உடலை அடக்கம் செய்துவிட்டு அமைதியாக இருந்தார்.
இந்த நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவுகளைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வெங்கடேசன் தலையில் பலமாக காயம் பட்டுள்ளது என்றும், மொபட்டில் இருந்து விழுந்ததால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது என்றும், யாரோ அவரை தாக்கியதாலேயே தலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவித்திருந்தனர். இதனால், உமாதேவியை பிடித்து போலீசார் விசாரித்தனர். தனக்கு ஒன்றும் தெரியாது என்று உமாதேவி சாதித்துள்ளார். மேலும் முன்னுக்குப் பின் முரணான வகையில் அவர் பதில் அளித்துள்ளார். இதனால், வழக்கமான விசாரணை செய்தபோது உமாதேவி உண்மையை ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தன்று வெங்கடேசன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். சரியாக வேலைக்கு செல்லாத வெங்கடேசனுக்கு குடிக்க பணம் ஏது என்று உமாதேவி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடைசியில், வீட்டிலிருந்த மிக்சியை விற்று குடித்ததாக வெங்கடேசன் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த உமாதேவி மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால், மனைவியை அடிக்க வெங்கடேசன் முயன்றுள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற உமாதேவி, கையில் கிடைத்த பொருளை எல்லாம் வைத்து வெங்கடேசனை அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் உமாதேவி. அடித்தோம் என்று சொன்னால் சரியாக இருக்காது என்று நினைத்த உமாதேவி, மொபட்டில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று கூறியுள்ளார். வெங்கடேசனுக்கு ஒன்றுமாகாது என்று நினைத்துள்ளார். ஆனால், பரிதாபமாக வெங்கடேசன் இறந்துவிட்டார். “அவருக்கு ஒன்றுமாகாது என்பதால் பொய் சொன்னேன். ஆனால் அவர் இறந்துவிடுவார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை” என்று கூறி அழுதுள்ளார். இதை அடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.