×

கடலில் திருமண நாளை கொண்டாட வந்த தம்பதி : கண்ணிமைக்கும் நொடியில் மனைவிக்கு நேர்ந்த சோகம் !

இவர்களுக்குக் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை திருமண நாள் என்பதால், அதனைக் கொண்டாட வியாழக்கிழமை அவர்களது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளனர். வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் வினி சைலா. செவிலியராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விக்னேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குக் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை திருமண நாள் என்பதால், அதனைக் கொண்டாட வியாழக்கிழமை அவர்களது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள்
 

இவர்களுக்குக் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை திருமண நாள் என்பதால், அதனைக் கொண்டாட வியாழக்கிழமை அவர்களது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளனர்.

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் வினி சைலா. செவிலியராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விக்னேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குக் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை திருமண நாள் என்பதால், அதனைக் கொண்டாட வியாழக்கிழமை அவர்களது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் இரவு தங்களது குடும்பத்துடன்   கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி விட்டுச் சரியாக 12 மணி அளவில் பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். 

அப்போது அவர்கள் அனைவரும் 30 பேருக்கு மேல் இருந்ததால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும், கேக் வெட்டி தான் கொண்டாடப் போவதாகக் கூறிவிட்டு இவர்கள் அனைவரும் கடலுக்கு அருகே சென்றுள்ளனர். இதில்  வினி சைலா மற்றும் விக்னேஷ் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மோதிரம் மாற்றிக் கொள்ள முயன்றுள்ளனர். அச்சமயம் பார்த்து எழுந்த ராட்சத அலை ஒன்று  வினி சைலாவை அடித்துக் கொன்று சென்றுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், மீனவர்களின் உதவியுடன் போலீசார்  வினி சைலாவை தேடி உள்ளனர், ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லையாம். இதனையடுத்து நேற்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமண நாளை கொண்டாட வந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.