×

கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது அனல்மின் நிலையம்- கமல்ஹாசன்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி 2 ஆவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5 ஆவது யூனிட்டில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உள்ளே சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 6 ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததோடு பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சமீபத்திலும் இதே
 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி 2 ஆவது அனல் மின் நிலையத்தில் உள்ள 5 ஆவது யூனிட்டில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உள்ளே சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 6 ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்ததோடு பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சமீபத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்ததால், என்.எல்.சியில் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து என்.எல்.சி 2 ஆவது அனல்மின் நிலைய மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.