×

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் புதிய பாடப்புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் செங்குந்தர் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வாரத்திற்குள் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் செங்குந்தர் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “எந்த அரசு பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பல பள்ளிகளில் ஒரு மாணவர், 2 மாணவர்கள் என குறைந்த எண்ணிக்கையில் படித்து வருகின்றனர்.

அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகளை நாம் கணக்கிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் அதுபோன்ற பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் எங்கெங்கு பாடப்புத்தகங்கள் சேதமடைந்துள்ளதோ, அந்த பகுதிகளில் ஒருவார காலத்திற்குள் புதிய பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.