×

ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் மீது ரூ.78 லட்சம் மோசடி புகார்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 78 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: 78 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின்
 

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 78 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 78 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மோசடி செய்ததாக ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஜெயசங்கர் மற்றும் சுவாமிநாதன் உள்ளிட்டோர் மீது ஆத்மிகா என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார்.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், புகாருக்கான ஆதாரங்களை மனுதாரர் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது