×

ஓட்டு போட வந்த 2 முதியவர்கள் திடீர் மரணம்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

வாக்கு செலுத்தச் சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு: வாக்கு செலுத்தச் சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். அதே போல் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக
 

வாக்கு செலுத்தச் சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு: வாக்கு செலுத்தச் சென்ற இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர். அதே போல் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்டவர்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்த முருகேசன் என்பவர் அப்பகுதியில் அமைந்திருந்த  வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அவர்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதே போல் மற்றொரு சம்பவம்  சேலம் மாவட்டம், வேடப்பட்டியில் நடந்துள்ளது. அங்கு முதியவர் கிருஷ்ணன் என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரம் அதிக வெயிலில் நின்றதால்  கூட முதியவர்கள்  உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 வாக்களிக்க வந்த இரண்டு முதியவர்கள் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: பெங்களூருவில் கனமழை; 3 பேர் பலி!