×

ஓ.பிஎஸ் – எடப்பாடிக்கு அடங்காத ஒற்றைத் தலைவலி… மடக்கிய செட்டப் செல்லப்பா..!

விரைவில் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு அதிமுகவில் ஒரு பொறுப்பு வழங்கவும் முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. சரி, எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி இறங்கிச் செல்ல வேண்டும்? சோழியன் குடுமி சும்மா ஆடுமா… என்கிற சொலவாடையை உண்மையாக்கி இருக்கிறார் ராஜன் செல்லப்பா. இரட்டை தலைமை வேண்டாம் என்று குரல் கொடுத்து ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்திய மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பாவுக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. இரட்டை தலைமை
 

விரைவில் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு அதிமுகவில் ஒரு பொறுப்பு வழங்கவும் முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. சரி, எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி இறங்கிச் செல்ல வேண்டும்?

சோழியன் குடுமி சும்மா ஆடுமா… என்கிற சொலவாடையை உண்மையாக்கி இருக்கிறார்  ராஜன் செல்லப்பா.  

இரட்டை தலைமை வேண்டாம் என்று குரல் கொடுத்து ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்திய  மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அதிமுக எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பாவுக்கு  கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. 

இரட்டை தலைமை வேண்டாம் என்று குரல் கொடுத்து அதிமுகவை ஆட்டம் காண வைத்த ராஜன் செல்லப்பாவை தனியாக அழைத்து எடப்பாடி பேசி இருக்கிறார். அப்போதும் சாந்தப்படாத ராஜன் செல்ல்ப்பாவிடம் எடப்பாடி, ‘நீங்கள் எதையோ எதிர்பார்க்கிறீர்கள். அந்த விரக்தியின் வெளிப்பாட்டால் தான் திடீர் குரல் கொடுகிறீர்கள். உங்கள் தேவை என்ன?’’ என நேரடியாகவே கேட்டிருக்கிறார். 

ஸ்டெரியிட்டாகவே மேட்டருக்கு வந்த ராஜன் செல்லப்பா, ‘’எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மகனுக்கு வாரியம் அல்லது கட்சியில் ஏதாவது ஒரு பதவி தரவேண்டும்’’ எனக் கூறியிருக்கிறார்.  அவரை சமாதானப்படுத்தவே  இப்போதைக்கு ராஜன் செல்லப்பாவை சகல அதிகாரம் கொடுத்து அதிமுக பேச்சாளர் பட்டியலில் இணைத்திருக்கிறார்கள். விரைவில் ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு அதிமுகவில் ஒரு பொறுப்பு வழங்கவும் முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. சரி, எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி இறங்கிச் செல்ல வேண்டும்? 

தென் மாவட்டத்தலைநகரான மதுரையில் ஓ.பிஎஸுக்கு எதிரான அரசியல் மட்டுமே அதற்கான ஒற்றைக் காரணம்’ என்கிறார்கள் அதிமுகவினர்.