×

ஓ.எல்.எக்ஸில் ராணுவ வாகனம் வாங்கி தருவதாக கூறி ரூ.200 கோடி மோசடி..வடமாநிலத்தவர்கள் கைது!

இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயம் ஆகி விட்டதால், மக்கள் எல்லாரும் இணைய தளத்தையே நாட வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயம் ஆகி விட்டதால், மக்கள் எல்லாரும் இணைய தளத்தையே நாட வேண்டியுள்ளது. இணைய தளத்தில் பழைய பொருள் வாங்கவும், விற்பனை செய்யவும் உருவாக்கப் பட்ட செயலி ஓ.எல்.எக்ஸ்.இதன் மூலம் பணம் ஏமாற்றப் படுவதாகக் காவல் துறையினரிடம் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் அந்த மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைத்த போலீசார், மோசடி செய்யப்பட்ட
 

இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயம் ஆகி விட்டதால், மக்கள் எல்லாரும் இணைய தளத்தையே நாட வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயம் ஆகி விட்டதால், மக்கள் எல்லாரும் இணைய தளத்தையே நாட வேண்டியுள்ளது. இணைய தளத்தில் பழைய பொருள் வாங்கவும், விற்பனை செய்யவும் உருவாக்கப் பட்ட செயலி ஓ.எல்.எக்ஸ்.இதன்  மூலம் பணம் ஏமாற்றப் படுவதாகக் காவல் துறையினரிடம் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் அந்த மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைத்த போலீசார், மோசடி செய்யப்பட்ட பணம் எந்த இடத்திற்கு செல்கிறது என்று சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தேடியுள்ளனர். 

அதில் மோசடி செய்யப்பட்ட பணம் ராஜஸ்தானில் இருப்பதும்,  பரத்பூர் என்ற இடத்தில், நரேஷ்பால் சிங், பச்சு சிங் என்ற நபர்கள்  தான் தமிழகத்தில்  ஓ.எல்.எக்ஸ் மூலம் மோசடியில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக ராஜஸ்தானுக்குத் தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

அவர்களைத் தமிழகத்துக்கு அழைத்து வர முயன்ற போது, அந்த ஊர் மக்கள் போலீசாரை முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அந்த கிராம மக்கள் எல்லாரும் இதில் ஈடுபட்டிருந்தது அம்பலமானது.அதன் பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஓ.எல்.எக்ஸில் ராணுவ வாகனம் வாங்கி தருவதாகக் கூறி ரூ.200 கோடி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.