×

ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 வடமாநிலத்தவர்கள்.. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அடைக்கலம்!

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் குழுமி இருக்க வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்த பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் குழுமி இருக்க வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்த பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் சேண்பாக்கம் பகுதியில் நேற்று மாலை 25 வடமாநிலத்தவர்கள் லாரி மூலம் வந்து இறங்கியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஊர்மக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார்
 

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் குழுமி இருக்க வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்த பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் குழுமி இருக்க வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்த பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் சேண்பாக்கம் பகுதியில் நேற்று மாலை 25 வடமாநிலத்தவர்கள் லாரி மூலம் வந்து இறங்கியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஊர்மக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது, 20க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர்கள் அனைவரும் பெட்சீட் மற்றும் தலையணை விற்பவர்கள் என்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் தடை செய்யப்பட்டு விட்டதால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தெரிந்த ஒரு நபர் மூலம் இங்கே அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் அந்த வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.