×

ஒரே ஒரு கேள்விதான் நீதிபதி கேட்டார், இன்னைக்கி வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்க!

போக்குவரத்து காவலர்களையும் சும்மா குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் என சட்டத்தை கடுமையாக்கத்தான் அரசுகளால் முடியும். அனைத்தும் நமது நன்மைக்கே என்பதை பொதுமக்கள்தான் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் பயணம் செய்பவர்களைப் பிடித்து அபராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என காவலர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவு எதுவும் பிறப்பித்து இருக்கிறார்களா என்று ஒரு அதிரடி கேள்வியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினார்கள். தலைக்கவசம்
 

போக்குவரத்து காவலர்களையும் சும்மா குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் என சட்டத்தை கடுமையாக்கத்தான் அரசுகளால் முடியும். அனைத்தும் நமது நன்மைக்கே என்பதை பொதுமக்கள்தான் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் பயணம் செய்பவர்களைப் பிடித்து அபராதம் எதுவும் விதிக்க வேண்டாம் என காவலர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவு எதுவும் பிறப்பித்து இருக்கிறார்களா என்று ஒரு அதிரடி கேள்வியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினார்கள். தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு விசாரணைக்கு வந்தபோது மேற்படி அதிரடி நிகழ்ந்தது. மேலும், தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது.

வழக்கமாக சென்னை போக்குவரத்து காவல் அதிகாரிகள் திடீரென வளையும் சாலை முக்குகளில் மட்டுமே நின்று வாகனங்களை மடக்குவார்கள். நேற்று நீதிமன்ற உத்தரவு வெளியானவுடன், எங்கிருந்துதான் வந்தார்களோ இத்தனை போலீஸாரும். ஒரு சிக்னல் விடவில்லை. சிக்னலுக்கு சிக்னல் நின்று, தலைக்கவசம் உயிர்க்கவசம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்க துவங்கினர். மறக்காமல் அவற்றை போட்டோவும் எடுத்துக்கொண்டனர். என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிமன்றம் கேட்டால், இதோ யுவரானர் என போட்டோக்களை காட்டிவிடலாம் பாருங்க.

போக்குவரத்து காவலர்களையும் சும்மா குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பத்து மடங்கு அபராதம் என சட்டத்தை கடுமையாக்கத்தான் அரசுகளால் முடியும். அனைத்தும் நமது நன்மைக்கே என்பதை பொதுமக்கள்தான் உணர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.