×

ஒரு காவலர் குடும்பம் நடத்த மாதம் 2 லட்சமும், டிஎஸ்பி-க்கு 5 லட்சமும் தேவை : வேலூர் டிஐஜி அதிரடி பேச்சு!

ஒரு காவலர் செய்யும் வேலைக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வேலூர் டிஐஜி வனிதா தெரிவித்துள்ளார். வேலூர்: ஒரு காவலர் செய்யும் வேலைக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வேலூர் டிஐஜி வனிதா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக காவலர்கள் பலர் வேலைநிமித்தம் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு பல இடங்களில் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் வேலூரில் காவலர்களுக்கான மன அழுத்தம்
 

ஒரு காவலர் செய்யும் வேலைக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வேலூர் டிஐஜி வனிதா தெரிவித்துள்ளார்.

வேலூர்: ஒரு காவலர் செய்யும் வேலைக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று வேலூர் டிஐஜி வனிதா தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக காவலர்கள் பலர் வேலைநிமித்தம் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு பல இடங்களில் நடந்தேறி வருகிறது.  இந்நிலையில்  வேலூரில் காவலர்களுக்கான மன அழுத்தம் போக்கும் நிறை வாழ்வு பயிற்சி முகாம் ஒன்று நடந்தது. அதில்  பங்கேற்ற வேலூர் டிஐஜி வனிதா, ‘நீங்க செய்யுற வேலைக்கு சம்பளம் கொடுக்கவே முடியாது.குறைந்த பட்சம் ஒரு டி.எஸ்.பிக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் அவரால் அந்த குடும்பத்தை நடத்த முடியும். அதே போல்  ஒரு காவலர் செய்யும் வேலைக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இது சேவைத்துறை என்பதால் சம்பளத்தை எதிர்பார்க்கக் கூடாது’.

‘காவலர்கள் பலர் மனா அழுத்தத்தில் இருக்கிறார்கள்.அதை போக்க என்ன வழி அப்படின்னு பார்த்தால், குடும்ப அமைப்பு ரொம்ப முக்கியம்.நீங்க உங்க குடும்பத்துடன் கிடைக்குற நேரத்தைச் செலவிடுங்கள், தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல், குடி, சிகரெட், மற்ற பெண்களுடன் தொடர்பு என தீய பழக்கங்கள் இல்லாமல் இருங்கள்.அப்படி இருந்தாலே நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு சொத்தாக பார்க்கப்படுவீர்கள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.