×

ஒத்திவைக்கப்பட்ட 102 பதவியிடங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் !

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்குக் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்குக் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.அப்போது, பல இடங்களில் சண்டையும் பல இடங்களில் பதற்றமும் நிலவியது. அதனால், கிட்டத்தட்ட 294 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களுக்கான தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக,
 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்குக் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்குக் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.அப்போது, பல இடங்களில் சண்டையும் பல இடங்களில் பதற்றமும் நிலவியது. அதனால், கிட்டத்தட்ட 294 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களுக்கான தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, போதிய உறுப்பினர்கள் வராததும் மற்றும் அசாதாரண சூழல் நிலவியதன் காரணமாகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

விடுபட்ட ஒன்றிய தலைவர்,மாவட்ட தலைவர் மற்றும்  மாவட்ட துணைத் தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 30ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி அன்று மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 102 பதவியிடங்களுக்கான தேர்தல்  ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட அந்த 102 இடங்களுக்கும் வரும் மார்ச் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும்  கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10:30 மணிக்கு நடைபெறும் என்றும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவிகளுக்குப் பிற்பகல் 3 மணிக்குத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.