×

ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி : நெல்லை மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனா பரவத்தொடங்கியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால்,அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்ட கொரோனா பரவத்தொடங்கியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால்,அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மூடப்பட்டிருந்த இறைச்சி கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி உத்தரவிட்டு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில் இறைச்சி
 

கொரோனா பரவத்தொடங்கியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால்,அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்ட

கொரோனா பரவத்தொடங்கியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால்,அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மூடப்பட்டிருந்த இறைச்சி கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும் என்று நெல்லை மாநகராட்சி உத்தரவிட்டு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. 

அதில், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டுமே, இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும். அதாவது, உழவர் சந்தை மைதானத்திலும் அருணகிரி தியேட்டர் நோக்கி செல்லும் திட்ட சாலையிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி. இதனை மீறி வேறு ஏதேனும் இறைச்சி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.