×

ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படும் ஓ.பி.எஸ்… ஆட்டம் காணும் அதிமுக..!

ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதிமுகவில் கோஷ்டி பூசல் கொளுந்து விட்டு எரிகிறது. எந்த விஷயத்திலும் யாரும் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை. இதனால் ஆளாளுக்கு நாட்டாமை செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களது பேச்சை கடைமட்டத் தொண்டர்கள் கூட மதிப்பதில்லை. கட்சிக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்றாலும் ஜெயலலிதாவை போல அவரால் அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை. முதல்வர் என்ற சர்வ அதிகாரம் எடப்பாடி
 

ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிமுகவில் கோஷ்டி பூசல் கொளுந்து விட்டு எரிகிறது. எந்த விஷயத்திலும் யாரும் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை. இதனால் ஆளாளுக்கு நாட்டாமை செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களது பேச்சை கடைமட்டத் தொண்டர்கள் கூட மதிப்பதில்லை. 

கட்சிக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்றாலும் ஜெயலலிதாவை போல அவரால் அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை. முதல்வர் என்ற சர்வ அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவரை கலந்தாலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் கட்சி ரீதியாக எடுக்க முடிகிறது. அதேபோல பழனிசாமியும் கட்சியில் சுயமாக செயல்பட முடியாது. ஓ.பிஎஸை ஆலோசித்து தான் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் போன்ற விஷயங்களில் அவரால் முடிவெடுக்க முடியும். 

இதனால், மாநில நிர்வாகிகள் பதவிகளில் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். மாவட்ட செயலர்களிலும், பொதுக்குழு உறுப்பினர்களிலும் இருவருக்கும் சமமான ஆதரவு இருக்கிறது. எனவே தான் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் பொதுச்செயலர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.  

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல முதல்வர் பதவியை வைத்திருப்பவர் தான் கட்சித் தலைமை பதவியையும் வைத்திருக்க வேண்டும் என்பதால் இரு பதவிகளையும் ஓ.பி.எஸிடம் கொடுத்து விட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அடம்பிடிக்கின்றனர். 

இதற்கிடையே மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பா.ஜ.க மேலிடத்தில் ஓ.பி.எஸ் பேசியதாக பழனிசாமி தரப்பில் புகார் வாசிக்கிறது. எனவே ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.