×

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குவியும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுகிறார்களா?!

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு பணிகளுடன் 3 இடங்களில் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் தொடர்ந்து இயங்கிய வண்ணமே இருந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய சந்தையான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு பணிகளுடன் 3 இடங்களில் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. 3 இடங்களில் இயங்கி வரும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தற்காலிகமாக பேருந்து
 

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு பணிகளுடன் 3 இடங்களில் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. இதனிடையே அத்தியாவசிய கடைகள் தொடர்ந்து இயங்கிய வண்ணமே இருந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய சந்தையான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு பணிகளுடன் 3 இடங்களில் காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது.

3 இடங்களில் இயங்கி வரும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தற்காலிகமாக பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் சந்தையிலிருந்து தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு வியாபரிகள் மூலம் திண்டுக்கல்லில் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து சென்னை சென்று வரும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், மொத்த மார்க்கெட்டுக்கே கொரோனா பரவும். 

இதனை உணராத மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் காய்கறிகள் வாங்க மக்கள் குவிக்கின்றார்களாம். அதனால் சந்தையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மார்க்கெட் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கோரிக்கை எழுந்துள்ளது.