×

ஏழை மாணவிக்கு இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி: ஸ்டாலின் கோரிக்கை ஏற்ற தனியார் அகாடமி!

தருமபுரியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி முன்வந்திருக்கிறது. சென்னை: தருமபுரியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி முன்வந்திருக்கிறது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெகத்தலாவ் ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், அக்கட்சியின் சட்டத்துறை துணைச்செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது, திம்மம்பட்டியைச் சேர்ந்த மாணவி
 

தருமபுரியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி முன்வந்திருக்கிறது.

சென்னை: தருமபுரியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க, ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி முன்வந்திருக்கிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெகத்தலாவ் ஊராட்சியில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், அக்கட்சியின் சட்டத்துறை துணைச்செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். 

அப்போது, திம்மம்பட்டியைச் சேர்ந்த மாணவி ப.அனிதா லட்சுமி என்பவர், ‘செருப்பு தைக்கும் தொழிலாளியான எனது தந்தை கஷ்டப்பட்டு என்னை பி.எஸ்சி.(விவசாயம்) படிக்க வைத்ததாகவும், எனக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து படிக்க ஆசை உள்ளது. எனவே சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்து விடுங்கள்’ என கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்த கே.எஸ்.ரவிச்சந்திரன், அது தொடர்பாக உடனடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியை தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின், ஏழை மாணவியை பயிற்சி மையத்தில் சேர்த்திடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகம், அதற்கான ஒப்புதல் கடிதத்தை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் எஸ்.தீனதயாளன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்திரசேகர், ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ஆகியோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மூக்கனூரில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட ஸ்டாலின், மாணவி அனிதா லட்சுமியை நேரில் அழைத்து, ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை அளித்தார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட மாணவி அனிதா லட்சுமி, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்.