×

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மீதான விசாரணையை முடிக்க நீதிமன்றம் கெடு!

ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு நாடுகளுக்கு தகவல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை முடிக்க வருகிற மே 4ம் தேதி வரை காலக்கெடுவை விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம். ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில்
 

ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு நாடுகளுக்கு தகவல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை முடிக்க வருகிற மே 4ம் தேதி வரை காலக்கெடுவை விதித்துள்ளது டெல்லி  நீதிமன்றம்.
ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு நாடுகளுக்கு தகவல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 4ம் தேதிக்குள்ளாக விசாரணை முடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் வழக்கு நடந்து வருகிறது.