×

ஏப்பம் விட்ட நிர்வாகிகள்… ஆப்பு வைக்கும் எடப்பாடி..!

யார் யார் சரியாக வேலை செய்யவில்லையோ அவரது பதவியை பறிக்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் பணத்தை ஏப்பம் விட்ட அதிமுகவினர் பதவிக்கு சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அலசி வருகிறது அதிமுக. தேர்தல் தோல்வி அதிமுகவை ரொம்பவே துவட்டி எடுத்து தொங்கப்போட்டு விட்டது. பணத்தை வாரியிறைத்தும் படுகுழியில் வீழ்த்தப்பட்டது அதிமுக. எங்கெல்லாம் பணம் விநியோகம் நடந்தது. எந்த பகுதியில் எல்லாம் அதிமுகவுக்கு ஓட்டு விழுந்துள்ளது, குறைந்துள்ளது என அதிமுகவினர்
 

யார் யார் சரியாக வேலை செய்யவில்லையோ அவரது பதவியை பறிக்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் பணத்தை ஏப்பம் விட்ட அதிமுகவினர் பதவிக்கு சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அலசி வருகிறது அதிமுக.  தேர்தல் தோல்வி அதிமுகவை ரொம்பவே துவட்டி எடுத்து தொங்கப்போட்டு விட்டது. பணத்தை வாரியிறைத்தும் படுகுழியில் வீழ்த்தப்பட்டது அதிமுக.  எங்கெல்லாம் பணம் விநியோகம் நடந்தது. எந்த பகுதியில் எல்லாம் அதிமுகவுக்கு ஓட்டு விழுந்துள்ளது, குறைந்துள்ளது என அதிமுகவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 இதற்காக வார்டு வாரியாக, கிளை வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் திருநெல்வேலி  தொகுதியில் போட்டியிட்டு தோற்ற மனோஜ்பாண்டியன் சட்டப்புலி வேறு.  இவரை நிறுத்தினால் அங்கு  கோஷ்டி பூசல் இருக்காது. அனைவரும் ஒருங்கிணைந்து வேலை பார்ப்பர் என்பதால்தான் இவருக்கு சீட் கொடுக்கப்பட்டது.  
ஆனால், தேர்தல் நேரத்தில் பணத்தை தண்ணீராக செலவழித்த போதிலும் பட்டுவாடா சரியாக சென்று சேரவில்லை. கொடுத்த பணத்தில் பாதியை பல இடங்களில் கட்சியினரே ஏப்பம் விட்டுவிட்டனர்.  அதனால் தான் நமக்கு ஓட்டு கிடைக்கவில்லை என மேலிடத்தில் புகார் அளித்துள்ளார் மனோஜ்பாண்டியன்.  இதனால் யார் யார் சரியாக வேலை செய்யவில்லையோ அவரது பதவியை பறிக்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது.  இதனால் பணத்தை ஏப்பம் விட்ட அதிமுகவினர் பதவிக்கு சிக்கல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அப்படியே நடவடிக்கை எடுத்து விட்டாலும்… அடபோங்க பாஸ்..!