×

ஏ.டி.எம்மில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களிடம் ரூ.52 லட்சம் பணத்தை ஆட்டையைப் போட்ட ஓட்டுநர் !

அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்ற ஓட்டுநர் அம்புரோஸ் அந்த பணத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்து, அந்த பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளார். சென்னை வேளச்சேரியில் விஜயா வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் ஊழியர்கள் கடந்த 19ஆம் தேதி இரவு ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் ரூ.52 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர். அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்ற ஓட்டுநர் அம்புரோஸ் அந்த பணத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்து,
 

அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்ற ஓட்டுநர்  அம்புரோஸ்  அந்த பணத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்து, அந்த பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் விஜயா வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் ஊழியர்கள் கடந்த 19ஆம் தேதி இரவு ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் ரூ.52 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர்.

அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்ற ஓட்டுநர்  அம்புரோஸ்  அந்த பணத்தை நோட்டமிட்டுக் கொண்டே வந்து, அந்த பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளார். இது குறித்துக் காவல் துறையில் வங்கி ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

 




அந்த பணத்தைத் திருடிக் கொண்டு  அம்புரோஸ் தப்பியோடியதால் அவரது மனைவி  ராணி மேரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது  அம்புரோஸின் வீட்டில் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

அதில், 32 லட்ச ரூபாய் பணம் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அம்புரோஸை வலைவீசித் தேடி வந்த போலீசார் அவரை திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த ரூ.20 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.