×

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு : அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின்
 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அப்போது அவர்களிடம் காவலர் வில்சனை கொலை செய்ததற்கு முக்கிய ஆதாரமான கத்தி மற்றும் துப்பாக்கியைப் பற்றி விசாரித்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் படி கத்தியையும் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றவாளிகளுக்கு உதவி செய்ததாக உசைன் ஷெரீப் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதில் 7 பேருக்கு இந்த கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் மற்றவர்களுக்கு மறைமுகமாகத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக தனிப்படைபோலீசார் விசாரித்து வந்த எஸ்.ஐ வில்சனின் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு கடந்த 3 ஆம் தேதி மாற்றப்பட்டது. 

இந்நிலையில் இன்று எஸ்.ஐ வில்சனின் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனிப்படை போலீசார் என்.ஐ.ஏ விடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தக்கலையில் தனி அலுவலகம் திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.